×

அரங்கு எண் எப்.52,53ல் சூரியன் பதிப்பகம்: மாணவர்கள், பெற்றோர் குவிந்தனர்

சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45 ஆவது புத்தக கண்காட்சி தொடங்கியுள்ளது. அதில் தினகரன் நாளிதழின் சூரியன் பதிப்பகம் சார்பில் எப்.52, 53 என இரண்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவர்களின் நலனுக்காக வெளியிடும் வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு அடங்கிய புத்தகம், போட்டித்தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்ளும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய புத்தகம், படித்தவுடன் வேலைவாய்ப்பு வழங்கும் விவரம் அடங்கிய புத்தகம், நாட்டில் சிறந்த கல்வியை வழங்கும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகள் குறித்த விவரங்கள் அடங்கிய புத்தகங்கள், ஜோதிடம், ஆன்மீகம், பயணம், சமையல், சிறுகதைகள், வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு அடங்கிய புத்தகம் போன்ற பல்வேறு புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கல்வி குறித்து தினகரன் நாளிதழ் வெளியிடும் புத்தகங்கள், செய்திகளுக்கு மாணவர்களிடத்திலும், அவர்களின் பெற்றோர்களிடத்திலும் பெரிய வரவேற்பு உள்ளது. இதனால் அவர்கள் ஆண்டுதோறும் புத்தக காட்சியில் இடம்பெறும் தினகரன் ஸ்டாலில் கலந்து கொண்டு ஏராளமான புத்தங்களை வாங்கிச் செல்வது வழக்கம். அந்தவகையில் நடப்பு கண்காட்சி நேற்று தொடங்கியது முதலே ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் திரளாக தினகரன் ஸ்டாலில் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச்சென்று வருகின்றனர்….

The post அரங்கு எண் எப்.52,53ல் சூரியன் பதிப்பகம்: மாணவர்கள், பெற்றோர் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Hall No ,Surya Publishing House ,CHENNAI ,NANDANAM YMCA ,45th Book Fair ,Maidan ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...